ABOUT US

இவ்வலைதளத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறது

இத்திருத்தலத்தில் 60,70 மற்றும் 80 வயது திருமணம் (சஷ்டி பூர்த்தி மற்றும்  இத்திருத்தலம்திருக்கடவூர்திருக்கடையூர் என்றும் தற்போது அழைக்கப்படுகிறதுபில்வனம் , பிஞ்சிலவனம் , கடவூர் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.

பூதிருக்கடையூர்ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் ஆலய தேவஸ்தானம் தருமபுர ஆதினம்மயிலாடுதுறைஇத்திருத்தலத்தில் சுயம்புவாக ஸ்ரீ அமிர்த கடேஸ்வரரும் அம்மை ஸ்ரீ அபிராமி அம்மனும் அருள் பாளிக்கின்றனர்இத்திருத்தலத்தில் 60, 70 மற்றும் 80 வயது திருமணம் (சஷ்டி பூர்த்தி மற்றும் சதாபிஷேகம்சாந்திசெய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறதுதிருக்கடையூர் பூஜா

இத்திருத்தலத்திற்க்கு வருபவர்களுக்கு அவர்களுது விருப்பம் போல் அனைத்து ஏற்பாடுகளையும் பூஜை, உணவு, உறைவிடம் மற்றும் இதர வசதிகளையும் செய்து வருகிறது).

 திருக்கடையூரில்முக்கிய நிகழ்வுகளாக
உக்ரரத சாந்தி (மணி விழா) –59 வயது பூர்த்தி 60 வயது ஆரம்பம்.சஷ்டியப்த பூர்த்தி – 60 வயது பூர்த்தி 61 வயது ஆரம்பம்.பீமரத சாந்தி – 70 வது வயது.விஜயரத சாந்தி – 75 வது வயதுசதாபிஷேகம் –80 வது வயது.ரெளத்ர சாந்தி –85 வது வயதி .காள சாந்தி (கனகாபிஷேகம்) –90 வது வயது.மஹா மிருதுன்யா சாந்தி (பூர்னாபிஷேகம்) 1து.00 வது வயஆயூஷ்ய ஷோமம் (எல்லா வயதினர்க்கும்)இத்திருத்தலத்தில் செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
தலமும் இருப்பிடமும்
அருள்மிகு அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் கோவிலமைப்பு
இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை சீர்காழி, பொறையாறு ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது. இத்தலத்தில் அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன் திருக்கோவில் உள்ளது. அருகில் திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. ஆக இரண்டு பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 18 கிலோ.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இத்தலம் 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தலமாகும்.

நகரின் நடுவில் மேற்கு நோக்கிய சந்நிதியுடன் கோவில் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு 2 இராஜகோபுரங்கள் மேற்புறம் ஒன்றும் கீழ்புறம் ஒன்றும் அமைந்துள்ளன. உள்ளே நுழைந்தவுடன் முதல் பிரகாரத்தில் இடதுபக்கம் நூற்றுக்கால் மண்டபமும் , பிரசங்க மண்டபமும் உள்ளன. வலது பக்கம் அபிராமி அன்னைக்குத் தனிக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ந்து நடனமண்டபம் வழியாக உள்ளே சென்று கொடிமர விநாயகரை வணங்கிவிட்டு உள்ளே செல்கிறோம் . நேர் எதிரில் கருவறையில் அமிர்தகடேஸ்வரர் காட்சி தருகிறார்.

 அருள்மிகு  அமிர்தகடேஸ்வரர்
தேவர்களும் அசுர்க்ளும் திருப்பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது. அவர்கள் அமிர்தத்தை உண்ணத்தலைப் பட்டபோது, முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் , தம்மை முதலில் வழிபடாத காரணத்திற்காக அமிர்தம் நிறைந்த ஒரு குடத்தை இத்தலத்தில் ஒளித்து வைத்துவிட்டார். இக்குடமே பின்னர் சிவலிங்கமாக மாறிவிட்டது. அமிர்தம் + கடம் அதுவே அமிர்தகடேஸ்வரர் எனப் பெயர் பெற்றது. இச் சிவலிங்கத் திருமேனியில் ஒரு பிளவும் பாசக்கயிறு பட்ட தலும்பும் காணப்படுகின்றன. இனவ மார்கண்டேயர் வரலாற்றினை நினைவூட்டுகின்றன.அமிர்தகுடத்தை ஒளித்து வைத்த விநாயகர் கள்ளவாரணப் பிள்ளையார் என்ற பெயரில் இத்தலத்தில் விளங்குகிறார்.

ஸ்வாமி சந்நிதியில் சங்குமண்டபத்தில் சந்திரசேகர் , சமயாச்சாரியர்கள் உற்சவமூர்த்திகளும் உள்ளனர். மகா மண்டபத்தில் கால சங்காரக் கடவுள் விளங்குகிறார். இக்கோவிலில் அகத்தியர் வழிப்பட்ட பாபகரேஸ்வரர் , புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் இருவரை வழிப்பட்ட பின்னரே மற்ற ஸ்வாமிகளை வழிபடுவர்.


காலசங்காரக்கடவுள்
மகா மண்டபத்தில் , இயமனை சம்காரம் செய்த இறைவன் எழுந்தருளியுள்ளார். மகா மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு அழகிய சபையில் வலது திருக்கரங்களில் சூலமும், மழுவும் இடது திருக்கரங்களில் பாசமும் தர்சனி முத்திரையுடனும் , தெற்கு முகமாகக் காணப்படுகிறார். இவருடைய இடது பாகத்தின் கீழ் இயமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கிறார். இயமன் காலடியில் மார்க்கண்டேயர் இறைவனைக் கட்டி அனைத்திருக்க சிவபூதம் கயிறு கட்டி இழுக்கிறது. இவரது இடது பாகத்தில் மும்பெருந் தேவியர் விளங்க , இம்மூர்த்திக்கு எதிரில் இயமனின் உற்சவமூர்த்தி எருமை மீது அமர்ந்து இறைவனின் அருளை நாடி கைக்கூப்பி வணங்கிய நிலையில் காணப்படுகிறது. பூமிதேவி விஷ்ணு ஆகியோரின் வேண்டுதல் படி இறைவன் இயமனை எழுப்பித்தந்தருளினார். இறைவன் அனுக்கிரகம் பெற்ற இயமனின் திருவுருவம் கால சம்காரமூர்த்தியின் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ளது.

இக்காலசம்கார மூர்த்தி வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் அதாவது சித்திரைப் பெருவிழாவின் 6 ம் திருநாளன்று வீதியுலா வருகிறார். இவரே அமிர்தகடேஸ்வரரின் உற்சவ மூர்த்தியாவார். இவர்களை வணங்கிவிட்டு முதல் பிரகாரத்தில் நுழைந்து முருகன், இலட்சுமி, சோமாஸ்கந்தர், நடராசர், பிட்ச்சாடனர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன் மற்றும் தென்புறத்தில் சப்தமாதர்கள் அறுபத்து மூவர் ஆகியோரைக் காணலாம்.

இரண்டாம் பிரகாரத்தில் அலங்கார மண்டபம் , யாகசாலை ஆகியவை உள்ளன. அடுத்து இறைவன் கோவிலை விட்டு வெளிவந்தால் , அபிராமி அன்னையின் தனிக்கோவில் உள்ளது.

அபிராமி அன்னை
இறைவி வலது மேல் திருக்கரத்தில் ஜெபமாலையும் , இடது மேல் திருக்கரத்தில் செந்தாமரை மலரும் , வலது கீழ்க்கரத்தில் அபய முத்திரையும், இடது கீழ்க்கரத்தில் வரதமுமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவரை சரஸ்வதி தேவியும் பூஜித்து பேரு பெற்றதாகக் கூறுவர்.
தல விருட்சம்
வில்வமும் , சாதி மல்லிகையும் இத்தல விருட்சங்கள் ஆகும். வில்வம் சிவவடிவமே என்பர். உபயோகித்த வில்வ தளங்களை நீரில் நனைத்து திரும்பத் திரும்ப நாம் பயன்படுத்தலாம் என்பர். மார்க்கண்டேயர் வேண்டுதல் படி கங்கை இத்தலத்திற்கு வந்த போது சாதி மல்லிகைக் கொடியும் உடன் வந்ததாகக் கூறுவர். ஸ்வாமிக்கு மட்டுமே இதன் மலர் பயன்படுத்தப்படுகிறது.

1. இறைவன் மார்கண்டேயருக்காக இயமனை உதைத்தருளியத் தலம் என்பதால் இது அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று.

2. திருஞான சம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம்
3. வறுமை வாட்டிய போதும் மனைவியினுடைய திருமாங்கல்யத்தை விற்று , குங்கிலியம் வாங்கி இறைவனுக்குக் குங்கிலியப் புகை போட்டு கோவில் தொண்டு செய்து முக்தியடைந்த குங்கிலியக் கலய நாயனார் தொண்டு செய்த தலம்.
4. தம் பெயரினால் கோவை பாடி மன்னர்களிடம் பெரும் பொருள் பெற்று , சிவாலயங்கள் கட்டுவித்தும், சிவனடியார்களைப் பேணியும் காரிநாயனார் அவதரித்த திருத்தலம்.
5. திருவுந்தியார் என்னும் ஞான நூலை இயற்றிய கடவூர் உய்யவந்த தேவநாயனார் வாழ்ந்த தலம் .
6. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிப் பாடலைக் கேட்டு அவருடைய பக்தியினை உலகினர் அறிய அபிராமி அன்னை தனது காது தோட்டினைக் கழற்றி வான மண்டலத்தில் வீசி , அம்மாவாசையை முழுமதி நாளாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலம்.

7. நவக்கிரகங்கள் தேவையில்லாத தலங்களில் இதுவும் ஒன்று.

8. பிரம்மனுக்கு உபதேசம் செய்த தலம். 9. எம பயம் போக்கும் தலம்.

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலியன வேறு எந்த தலத்தில் நடத்தினாலும் இத்தலத்து இறைவனை நினைத்து செய்ய வேண்டிய தலம்.

திருவிழாக்கள்
    இக்கோவிலில் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதில் 6ம் திருநாளன்று கால சம்காரம் உற்சவம் நடைபெறும். அன்று ஒரு நாள் மட்டுமே காலசம்ஹார மூர்த்தி வீதியுலாவிற்கு எழுந்தருளுகிறார். கார்த்திகை மாதத்தில் சோமவார சங்காபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சிவன் அபிஷேகப்பிரியர் ஆவார். எனவே இந்நாட்களில் வலம்புரி , இடம்புரி சங்குகளில் மார்க்கண்டேயர் கொண்டு வந்த கங்கா தீர்த்தத்தை மார்க்கண்டேய தீர்த்தத்தினை எடுத்து வந்து 

அமிர்தகடேஸ்வரர்க்கு அபிஷேகம் செய்வர். அபிஷேகத்தின் போது லிங்கத்தின் மீது பாசக்கயிறு பட்ட தலும்பினையும் , காலனை சம்காரம் செய்ய இறைவன் லிங்கம் வெடித்துச் சிதற வெளிப்பட்ட போது ஏற்பட்ட பிளவினையும் நாம் காணலாம்.ஹோமங்களும் அதன் சிறப்புகளும்

இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும். ஒரு மனிதனுக்கு 60 வயதில் தான் பல்வேறு கண்டங்கள் வந்து அவனுடைய ஆயுளைக் குறைக்கும் என்பதால் மக்கள் சாந்தி ஹோமங்கள் செய்து தங்களுடைய ஆயுசு நீட்டிக்க இங்கு வருவார்கள். இங்கு 60, 80 ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. ஆண்கள் , தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது.

சாந்தி ஹோமங்கள் செய்த பின் காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும். உடல் பலம் பெரும் , நோய் நொடி விலகும், எம பயம் அண்டாது என்பது கண் கூடாகத் தெரிகிறது

.
59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் – உக்ரசாந்தி பூஜை

60 வயது முடிந்து 61 வயது தொடங்குகிறவர்கள் – சஷ்டியப்தபூர்த்தி பூஜை

70 வயது முடிந்து 71 வயது தொடங்குகிறவர்கள் – பீமரதசாந்தி பூஜை

80 வயது முடிந்து 81 வயது தொடங்குகிறவர்கள – சதாபிஷேகம் பூஜை

99 வயது முடிந்து 100 வயது தொடங்குகிறவர்கள் – கனகாபிஷேகம் பூஜை

இதை தவிர 1 வயது முதல் 100 வயது வரை உள்ளவர்கள்

தங்களுடைய ஜென்ம நட்சத்திரத்தன்று ஆயுள் விருத்திக்காக செய்யும் பூஜை ஆயுள் ஹோமம் எனப்படும்.

காலசம்கார மூர்த்தி சந்நிதிக்குள் ஸ்வாமிக்கு வலப்புறத்தில் மதிலில் ஒரு எந்திர தகடு உள்ளது. இதனை திருக்கடையூர் ரகசியம் என்பர் .இதனை வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பர்.

மேலும் இத்தலத்தில் வியாதிகள் குணமாக சங்காபிஷேகமும், புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிஷேகமும், இதய நோய் உள்ளவர்கள் சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை செய்து பலன் அடைகிறார்கள்.

இவ்வித பூஜைகள் ஹோமங்கள் செய்கிறவர்கள் , கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரனர வழிபட்டு தங்கள் வேண்டுதல் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்கிறார்கள்.திருக்கடவூர் மயானம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

திருக்கடவூருக்கு கிழக்கில் 2 கிலோ. மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் தற்போது திருமெய்ஞானம் என்றும் , திருமயானம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஸ்வாமி பெயர் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பெயர் மலர்க்குழல் மின்னம்மை ஆகும்.

இம்மயானத்தில் இறைவன் பிரம்மனை நீராக்கி , மீண்டும் உயிர்ப்பித்து , படைப்புத் தொழிலைச் செய்யுமாறு அருளிய தலம். இம்மூவராலும் பாடல் பெற்ற தலம் ஆகும். இங்குள்ள மார்க்கண்டேய தீர்த்தத்திருந்து தான் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகத்திற்காக நாள்தோறும் நீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்கோவிலுக்கு அருகில் உள்ள தூசி தீர்த்தத்தின் நீரையே மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள். இங்கு மார்க்கண்டேய தீர்த்தம் ஒரு கிணறு வடிவில் உள்ளது. மார்க்கண்டேயரின் வேண்டுதல் படி கங்கா தீர்த்தம் ஒரு கிணற்றில் தோன்றியது. அமிர்தகடேஸ்வரருக்கு மட்டுமே இத்தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.

1008 சங்காபிஷேகத்திற்கு இத்தீர்த்தம்மே பயன்படுகிறது. பங்குனி மாதம் சுக்கில பட்சம் , அசுவினி நட்சத்திரத்தன்று மட்டுமே இத்தீர்த்தக் கரையில் ஸ்வாமி பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுத்தருளுவார்.

முடிவுரை
எனவே நாமும் , ஆயுள் விருத்திக்காக அமிர்தகடேஸ்வரரையும் , கால சம்கார மூர்த்தியையும் , ஞானமும் செல்வமும் பெற அபிராமி அன்னையையும் தரிசித்து , தனது படைப்புத் தொழில் திரும்பப் பெற்ற பிரம்மன் போன்று , நம்முடைய தொழிலில் ஏற்படும் இடையூறுகளை வென்று தொழில் விருத்தி பெற பிரம்மபூரீஸ்வரரையும் வணங்கி , 100 வது வயதில் கனகாபிஷேகம் என்னும் ஹோமம் செய்ய நமக்கும் இறையருள் கிட்டும் என்ற முழு நம்பிக்கையுடன் ,

About Temple

Sri Abirami Amman Sametha Sri Amirthakadeswarar Temple is located at THIRUKADAVOOR (thirukadaiyur), Tanjore District 18 Kms away from Mayiladuthurai. This temple is maintained and controlled by DHARMAPURAM ADHEENAM MUTT.

THIRUKKAAIYUR TEMPLE
 Among the Eight Veeratanam (Avatharams) of Lord Shiva this is the Eighth Veeratanam. The ancient tamil poets named Thirunavukkarasar, Sundarar and Thirugnanasambandar wrote and praised this Temple. This temple is facing to the West. More than that this Temple having Pinjalam and Vilvam Tree as ThalaVirtcha (each temple have a particular unique type of trees). In ancient time Devas and Asuras were found the Amirtham at Thiruparkadal while they tried to segregate the Amirtham between them they forgot to worship the First and Foremost God of Hindus Lord Ganesh (Lord Ganesh in southern regions of India also called as Vinayakar). For this reason Lord Ganesh got angry and hided the Amirthakalasam (full of Amirtham in a Kalasam) at this temple found by the Devas and Asuras at Thiruparkadal.

Later on the Amirthakalasam become as SIVALINGAM in this temple. Hence this temple Moolavarwas briefly known as AMIRTHAKADESWARAR (Amirtham + Kadam). For this kind of incident from IKALLAVINAYAKAR. This Kallavinagayar as praised by Abiramibatter in Kallavaram.

ANNAI ABIRAMI

The Kungliyanayanar and Kariyanayanar among the 63 Nayanmars were done Sivathondu (service to Lord Siva). While the ruling period of King Saraboji, Goddess AbiramiAmbal made Amavasai (Moonless Night) into Pournami (Fullmoon day) for a Devottee named Abirami Batter and for this Abirami Batter praised the Goddess AbiramiAmbal’sAbiramiAnthathi.

One of the Eight Viraattanams (Avadharams) of Lord Siva. This temple belongs to DharmapuramAadinam (Mutt). This temple deities are sung by the three Tamil Trinities i.e, Appar, Sundar and Thirugna .Thirukkadaiyur is further purified by the holy trees like Pinchilam (2000 Years Old Tree) and Bael tree (Vilvam tree).

MARKANDAYA

Thirukadaiyur is the place where Lord Shiva has bestowed immortality to Sri Maarkandaya and best owed with Ever Sixteen Age (16). For example Lord himself killed the God Yaksha (Yaman) and saved his votary’s life. He has also bestowed yama with the Absolution for the sake of the Goddess Bhumadevi. Here the Lord killed Yama, for the sake of his votary and has known as Lord Mirthunjayamoorthi. Hence, people perform SHASTHIABHAPOORTHI at the begininning of 61st Age of their Star Birthday, BHEEMARATHA SHANTHI at the beginning of 70th Age of their Star Birthday and SADHABISHEGAM at the beginning of 80th Age of their Star Birthday. Other important functions take place here areAyush-Homam for Children to remove the future Astrolgical difficulties arising from Navagrahas. If anybody is suffering from serious disease and is in the verge of their lives, Mirthunja-Homam is performed here to Lord to save their lives and to relieve them from all illness. This is a proven fact.It is the place where two out of the 63 Naayanmars Viz., GungiliyaNaayanar and KaariNaayanar were rendering services to get the blessings of the Lord.

THIRUPARKADAL

Before taking Amirtham from Paarkadal, the Devas and Asuras did not pray the first God Vinayaga (Lord Ganesha). He got angry and had stolen the Amirthakalasa and hided it somewhere. It later on became Siva Lingam and hence the Moolavar is known as Amirtham + Kadam and briefly known as Lord Amirthakadeswarar. God Vinayaga has hided the Amirthakalasam. Hence he gets the name Kallavaaranam. The famous votary of LordessAbirami, the Abirami Butter has sung Pathigam and Andhadhi on the first God Kalavaranam. It has its own significance. The LordessAbirami has come as Amman Sakthi from Lord Mahavishnu's ornament (necklace).

THE KING OF SARABOJI

During the Rule of the King Saraboji, Lordess Abirami, for the sake of her votary Abirami Butter, has thrown her stud (Thaadangam) towards the sky during the new moon day. The stud later become round shaped and the new moon day turned into a full-moon Day (Pournami). The votary Abirami Butter has sung the famous"AbiramiAndhadhi" praising LordessAbirami to save him from death, sentenced by the King. LordessAbirami excused the king and gave her blessings to the votary. This historical story further blossoms Thirukadaiyur. In the Tamil Calendar, during the month of Kaarthigai (Viruchiga Month), on each and every Monday during Somavarams, the Priests performs "Sankaa-Abishegam" with 1008 Sankus to the Deities for get the blessings for the welfare of the people.

YAMA-SAMHARAM

Another famous ocassion is "Yama-Samharam" which takes place annually during the first month of the Tamil year Chithirai (Mesha Month) during Magam Star. This is being celebrated as Lord Shiva killed Yama, in order to save the life of his votary Maakandeyar. Thirukadaiyur has its own significant place in the History of TamilNadu and is one of the ancient temple in the place.History of Thirukadaiyur Temple

Sri Abirami Amman Sametha Sri Amirthakadeswarar Temple is located at THIRUKADAVOOR (thirukadaiyur), Tanjore District 18 Kms away from Mayiladuthurai. This temple is maintained and controlled by DHARMAPURAM ADHEENAM MUTT. 

Among the Eight Veeratanam (Avatharams) of Lord Shiva, this is the Eighth Veeratanam. The ancient Tamil poets named Thirunavukkarasar, Sundarar and Thirugnanasambandar wrote and praised this Temple. This temple is facing to the West. More than that this Temple having Pinjalam and Vilvam Tree as Thala Virtcha (each temple have a particular unique type of trees). In ancient time Devas and Asuras were found the Amirtham at Thiruparkadal while they tried to segregate the Amirtham between them they forgot to worship the First and Foremost God of Hindus Lord Ganesh (Lord Ganesh in southern regions of India also called as Vinayakar). For this reason, Lord Ganesh got angry and hided the Amirthakalasam (full of Amirtham in a Kalasam) at this temple found by the Devas and Asuras at Thiruparkadal.

Later on, the Amirthakalasam become as SIVA LINGAM in this temple. Hence this temple Moolavar was briefly known as AMIRTHAKADESWARAR (Amirtham + Kadam). For this kind of incident from Lord Ganesh, the temple has a separate Sannathi for Lord Ganesh is known as KALLAVINAYAKAR. This Kallavinagayar as praised by Abiramibatter in Kallavaram. 

The Kungliyanayanar and Kariyanayanar among the 63 Nayanmars were done Sivathondu (service to Lord Siva). While the ruling period of King Saraboji, Goddess Abirami Ambal made Amavasai (Moonless Night) into Pournami (Fullmoon day) for a Devottee named Abirami Batter and for this Abirami Batter praised the Goddess Abirami Ambal’s Abirami Anthathi. 

One of the Eight Viraattanams (Avadharams) of Lord Siva. This temple belongs to Dharmapuram Aadinam (Mutt). These temple deities are sung by the three Tamil Trinities i.e, Appar, Sundar and Thirugna . Thirukkadaiyur is further purified by the holy trees like Pinchilam (2000 Years Old Tree) and Bael tree (Vilvam tree).

Thirukadaiyur is the place where Lord Shiva has bestowed immortality to Sri Maarkandaya and best owed with Ever Sixteen Age (16). For example, Lord himself killed the God Yaksha (Yaman) and saved his votary’s life. He has also bestowed Yama with the Absolution for the sake of the Goddess Bhumadevi. Here the Lord killed Yama, for the sake of his votary and has known as Lord Mirthunjayamoorthi. Hence, people perform Shastiapthapoorthi at the beginning of the 61st Age of their Star Birthday, Bheemaradha Shanthi at the beginning of the 70th Age of their Star Birthday and Sadabishegam at the beginning of 80th Age of their Star Birthday. Other important functions take place here are Ayush-Homam for Children to remove the future Astrolgical difficulties arising from Navagrahas. If anybody is suffering from serious disease and is on the verge of their lives, Mirthunja-Homam is performed here to Lord to save their lives and to relieve them from all illness. This is a proven fact. It is the place where two out of the 63 Naayanmars Viz., Gungiliya Naayanar and Kaari Naayanar were rendering services to get the blessings of the Lord.

Before taking Amirtham from Paarkadal, the Devas and Asuras did not pray the first God Vinayaga (Lord Ganesha). He got angry and had stolen the Amirthakalasa and hided it somewhere. It later on became Siva Lingam and hence the Moolavar is known as Amirtham + Kadam and briefly known as Lord Amirthakadeswarar. God Vinayaga has hided the Amirtha kalasam. Hence he gets the name Kallavaaranam. The famous votary of Lordess Abirami, the Abirami Butter has sung Pathigam and Andhadhi on the first God Kalavaranam. It has its own significance. The Lordess Abirami has come as Amman Sakthi from Lord Mahavishnu's ornament (necklace).

During the Rule of the King Saraboji, Lordess Abirami, for the sake of her votary Abirami Butter, has thrown her stud (Thaadangam) towards the sky during the new moon day. The stud later become round shaped and the new moon day turned into a full-moon Day (Pournami). The votary Abirami Butter has sung the famous"Abirami Andhadhi" praising Lordess Abirami to save him from death, sentenced by the King. Lordess Abirami excused the king and gave her blessings to the votary. This historical story further blossoms Thirukadaiyur. In the Tamil Calendar, during the month of Kaarthigai (Viruchiga Month), on each and every Monday during Somavarams, the Priests perform "Sankaa-Abishegam" with 1008 Sankus to the Deities for get the blessings for the welfare of the people.

Another famous ocassion is "Yama-Samharam" which takes place annually during the first month of the Tamil year Chithirai (Mesha Month) during Magam Star. This is being celebrated as Lord Shiva killed Yama, in order to save the life of his votary Maakandeyar. Thirukadaiyur has its own significant place in the History of TamilNadu and is one of the ancient temple in the place.

AROUND

Thirukkadaiyur is a temple town located adjoining the city of Thanjavur, Tamil Nadu. The Abirami Temple is associated with the legends of Markandeya and Abirami Pattar. Thirukkadaiyur is famous for the Amritaghateswarar temple dedicated to Lord Shiva where he defeated Yama, the lord of Death. Lord Shiva got married Abhirami here thus came into existence the Goddess Abhirami Shrine. From historical sites to cultural attractions, explore the exhaustive list of all other local attractions in Thirukadaiyur. Check out the list of attractions and activities to do in Thirukadaiyur.

VAITHEESWARAN KOIL - CHEVVAI

Vaitheeswaran Koil temple is dedicated to Lord Shiva, located in Tamil Nadu. It is just 25 km from Hotel Sadhabishegam, Thirukadaiyur. Shiva is worshipped as Vaitheeswaran which means "God of healing" and it is believed that prayers to Vaitheeswaran can cure diseases. In Tamil vaidya means Doctor and Ishvara means God/Master. It is one of the Navagraha temples associated with the planet Mars. People believe that taking a bath in the Siddhamirtham tank and praying for Vaitheeswaran in wet clothes, will cure all the skin diseases. Palm leaf astrology, also known as Naadi astrology is famous in this place.

POOMPUHAR - BEACH

Poompuhar Beach is the most popular beach located in Poompuhar, Tamil Nadu, along the Bay of Bengal. Chitra Pournami is an important festival for this beach during the full moon in Tamil month chittrai. It is just 16 km from the Hotel Sadhabishegam, Thirukadaiyur. This black sand beach is a popular picnic spot. The most popular attractions is an engraved monument with a bathing scene. The classically built seven tired building is a home to the Silappathikara Art Gallery. The Poompuhar city with the beach plays an important role in South Indian history.

CHIDAMBARAM - THILLAI NATARAJA TEMPLE

Chidambaram Temple is also known as Thillai Nataraja Temple, located in Chidambaram town, Tamil Nadu - South India. It is just 45 km from the Hotel Sadhabishegam, Thirukadaiyur. This Hindu temple is dedicated to Shiva, Lord of dance. The temple has influenced worship, architecture, sculpture and performance art for over two millennium. This temple is one of the five Pancha Bootha Sthalams representing akasha.

THIRUNELLARU - SANI

Thirunallar is a small town in Karaikal - Puducherry. It is just 30km from Hotel Sadhabishegam, Thirukadaiyur and is famous for the shrine of Lord Sani (Saturn). Tirunallar Saniswaran Temple is dedicated to Lord Darbharanyeswaran, a form of Lord Shiva. It is believed that taking bath in Nala Theertam washes off all kinds of misfortunes and afflictions caused by one's past of karmas. Lord Shani or Saturn is said to be the dispenser of karmas.

THIRUVENKADU - SWETHARANYESWARAR TEMPLE

Swetharanyeswarar Temple is located in the town of Thiruvenkadu. It is just 23km from Hotel Sadhabishegam, Thirukadaiyur. The main deity is Swetharanyeswarar - the lord of the white forest, a form of Shiva and his consort Brahmavidya Ambal. The temple is famous for Budhan Shanthi. The place is also famous for its unique structure of pools in temples. The temple has 3 pools and 3 gods, there is a belief that whoever takes a bath in all the pools will be free from their problems. The temple is considered as equivalent to the Kashi Vishwanath Temple.

KEEZHA PURUMPALLAM - KETHU STHALAM

The Naganatha Swamy Temple is also known as Kethu Sthalam, represents Navagraha(celestial bodies) Kethu. It is located in the village of Keezhaperumpallam, Tamil Nadu. It is just 24kms from Hotel Sadhabishegam, Thirukadaiyur. The presiding deity is Ketu. However, the main idol in the temple is Naganatha Swamy. Devotees believe that worshiping in this temple will get rid of Naga dhosham, Kethu dhosham, and marriage related problems. Here, Lord Kethu is offered with Lilly flowers, horse gram, and multi-colored cloths.

TARANGAMBADI BEACH

Tharangambadi was formerly known as Tranquebar, is a town in the Nagapattinam - Tamil Nadu. It lies 9km from the Hotel Sadhabishegam, Thirukadaiyur. There are many artifacts built by the Danish, which are the major tourists attractions. Danish Fort, Danish Museum, and Fort Dansborg are the major attractions. Zion Church talks about colonial rule in this region.

11 DIVYADESAMS OF THIRUNANGUR

A group of 11 Vishnu temples at Nangur Nagapattinam district of Tamilnadu collectively called Thirunangur Divyadesams. All these temples are close to each other and are popular Thirumangai Alwar Mangalasasana Utsavam during the Tamil month of thai. It is said that Lord Vishnu has appeared in 11 forms at Thirunangur as requested by Lord Shiva. The 11 Divyadesams of Thirunangur are Thiru Parthanpalli, Thiru Kavalampadi, Manimada Kovil, Thirudevanar Thogai, Thiru Manikoodam, Arimeya Vinnagaram, Vaikuntha Vinnagarm, Thiru Vellakulam, Thirumani Koodam, Thiruteriambalam, and Semponsei Kovil.